கோவையில் பரபரப்பு:- போதையில் ரகளை செய்த பள்ளி மாணவி
கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் 16 வயதான பிளஸ்-2 மாணவி .நேற்று சீருடையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்ட்டு தனது தோழிகள் சிலருடன் பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்று மது குடித்தார்.போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார். இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல அந்த மாணவியின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது. சேரன் நகர் தாண்டி துடியலூர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த அந்த ரோட்டில் தவறி கீழே விழுந்தார். அவர் காதல் தோல்வியால் தான் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாணவியின் காதலனை அவர் தகாத வார்த்தையில் திட்டி தகராறு செய்துள்ளார். நடுரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவருடன் மாணவர் மல்லுகட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவி அருகே சென்று பார்த்த போது தான் அவர்களுக்கு மாணவி போதையில் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்க முயன்றனர். பொதுமக்களையும் காலால் எட்டி உதைத்து ரோட்டில் வட்டமடித்தார்.பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.தகவலறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு குவிந்தனர். ஒருவரையும் விடாமால் வளைத்து வளைத்து திட்டிக் கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்ததும் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவியின் நிலை கண்டு பதறிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.ஆனால் மாணவியோ போலீசாரை கூட அடையாளம் தெரியாமல் திட்டியுள்ளர். இதையடுத்து அந்த மாணவியை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் போட்டு துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். போலீசார் அந்த மாணவிக்கு அறிவுரைகள் கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

No comments:
Post a Comment