வாட்ஸ்அப்’பில் வீடியோ வெளியானதால் பரபரப்பு : 4 வயது குழந்தைக்கு மது கொடுத்த கொடூரம் கலசபாக்கம் அருகே சிறுவனை மது குடிக்க வைத்தது வாட்ஸ் அப் மூலம் வெளியாகி, 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை தேடிவருகின்றனர். 4வயது சிறுவனை 5 வாலிபர்கள் மது குடிக்க வைக்கும் சம்பவம் வாட்ஸ் அப் மூலம் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அருகே டிஎன் 25 ஏ.ஜெ.8209 என்ற எண்ணுள்ள பைக் இருந்தது. இந்த வாகனத்தின் பதிவெண் திருவண்ணாமலை மாவட்டம் என்பதால், யாருடையது என விசாரிக்க எஸ்பி பொன்னி, போளூர் டிஎஸ்பி கணேசனுக்கு உத்தரவிட்டார். விசாரணையில் அந்த பைக் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(23) என்பவருக்கு சொந்தமானது என்றும் அவர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி செய்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடலாடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:கடந்த மாதம் 23ம் தேதி அன்று மேல் சோழங்குப்பம் ஏரியில் உள்ள மரத்தடியில் நானும் நண்பர்கள் பிரேம்குமார்(22), முருகன்(20), அவரது தம்பி மணிகண்டன்(21) மற்றும் ராஜாராம் ஆகியோர் மது குடித்தோம். அப்போது ஏரியில் நடந்த கிரிக்கெட்டை பார்க்க முருகனின் அக்கா மகன் லோகேஷ்(4) உள்பட சிறுவர்கள் வந்தனர். லோகேஷை பார்த்த முருகன் அவனை அழைத்து பீர் கொடுத்து குடிக்க வைத்தார். மேலும் அவனுக்கு சுண்டல் கொடுத்தார். சிறுவன் பீர் குடிப்பதை பார்த்து அனைவரும் சிரித்தனர். இந்த சம்பவத்தை நான் செல்போன் மூலம் வீடியோ எடுத்தேன். நேற்று முன்தினம் இரவு இ்ந்த வீடியோ காட்சியை வாட்ஸ் அப்பில் மற்ற நண்பர்களுக்கு அனுப்பினேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கடலாடி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து ஏழுமலை, அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள முருகன், மணிகண்டன், ராஜாராம் ஆகிய 3 பேரையும் தேடிவருகிறார்கள்.
Thursday, 9 July 2015
4 வயது குழந்தைக்கு மது கொடுத்த கொடூரம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment