டார்லிங் படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி, மனீஷா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது, சில பாடல்களையும் திரையிட்டனர். அதில் தனது முந்தைய படத்தை முறியடிக்கும் வகையில், செம குத்தாட்டம் போட்டிருந்தார் ஜி.வி.பிரகாஷ். டார்லிங் படத்தில் என்ன செய்வது ஏது செய்வது என்று பேந்த பேந்த விழித்துக்கொண்டு நின்ற அந்த நடிகரா இவர் என்று நினைக்கையில் ஆச்சர்யமாக இருந்தது.மேலும், இந்த விழாவில் ஜி.வி.பிரகாஷை வாழ்த்த வந்தவர்களில் பார்த்திபனும் ஒருவர். இவர் வழக்கம்போலவே மேடையில் என்ன பேசுவது என்று முன்னமே நிறைய ஹோம் ஒர்க் செய்து வந்து ஒரு குட்டிக்கதையை மேடையில் சொன்னார்.அதாவது, ஒரு நபர் ஒரு பேசும் கிளியை வளர்த்து வந்தார். அதை அவர் ஒரு பெண்ணிடம் விற்க நினைத்து விலை பேசினார். அப்போது அந்த பெண், கிளியைப்பார்த்து என்னை பார்த்தால் உனக்கு என்ன தோணுது? என்று அந்த கேட்க, அந்த கிளி அயிட்டம் என்று தோணுவதாக சொன்னது. அதைக்கேட்டு அந்த பெண் செம கோபமாகி விட்டாள். அதையடுத்து அந்த கிளியின் சொந்தக்காரன், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நிறைய பொய் பேசணும் என்று அதற்கு சொல்லிக்கொடுத்து மீண்டும் அவளிடம் கிளியிடம் பேச சொன்னார்.அப்போது அந்த பெண், ராத்திரியில் என் வீட்டுக்கு ஒரு ஆம்பளை வந்தா என்ன நெனப்பே என்று கேட்டாள். அதற்கு உன் கணவன் என்று நினைப்பேன் என்று சொன்னது. அதையடுத்து, அவனோடு இன்னொரு ஆம்பளையும் சேர்ந்து வந்தா என்ன நெனைப்பே? என்று கேட்க, உன் கணவனின் தம்பி என்று நினைப்பேன் என்று சொன்னது. அதைக்கேட்டு அந்த பெண்ணுக்கு ரொம்ப சந்தோசம். அதன்பிறகு, அந்த இரண்டு பேருடன் இன்னொரு ஆம்பளையும் சேர்ந்து வந்தால் என்ன நெனைப்பே? என்று கேட்டாள். அப்போது தனது சொந்தக்காரனைப்பார்த்து திரும்பிய கிளி, நான் அப்பவே அவள் ஒரு அயிட்டம்னு சொன்னேனே கேட்டியா என்றது.இப்படி கதை சொன்ன பார்த்திபன், நம்ம ஜி.வி.பிரகாஷ் நன்றாக இசையமைக்கிறார், நல்லா நடிக்கிறார், நல்லா ஆடுகிறார். இப்படி பல அயிட்டங்களை உள்ளடக்கி வைத்திருப்பதால் அவரும் ஒரு அயிட்டம்தான் என்றார். பார்த்திபனின் இந்த பேச்சு விழா அரங்கத்தையே கலகலப்பாக்கியது.
No comments:
Post a Comment