Thursday, 27 August 2015

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்-கார்திக் ஜோதிடம்!

1. குதிகால் வலி யாருக்கு வரும்?

           குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என்ற எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் பிரச்சனை ஏற்படும்போது இந்த குதிகால் வலி ஏற்படும். பாதத்தில் இருக்கும் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு பாதத்தின் முன்பகுதியையும் கேல்கேனியம் இருக்கும் பின்பகுதியையும் இணைத்து பாதத்தில் இருக்கும் உள்வளைவை தாங்குகிறது. நாம் படுத்திருக்கும்போது இந்த பாதவளைவும் பிளான்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும் நாம் நடக்கும்போது,நிற்கும்போது இவ்வளைவுகள் இழுக்கப்படுகிறது. இங்ஙனம் தினம்தினம் இழுக்கப்படுவதால் கேல்கேனியம் எலும்பிலிருந்து பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அறுக்கப்படுகிறது. இப்படி அறுக்கப்பட்ட சவ்வை இணைப்பதற்காகவே நமது உடலாது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது. இந்த செயலால் வலி உண்டாகிறது. யாருடைய ஜாதக்தில் 6மிடம்+12மிடம் இரண்டுக்கும் சனி,புதன் சம்பந்தம் (சேர்க்கை பலம் அல்லது பார்வை பலம் …) இருக்கிறதோ அவர்களுக்கு இந்த குதிகால் வலி ஏற்படும்

2. பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்? - ஜோதிட ஆராய்ச்சி

1.புதன் பலமாக இருப்பது நல்லது. கெடாமல் இருக்க வேண்டும்.
2. சூரியன் புதன் சேர்க்கையிருந்தால் மிகவும் நல்லது.
3. திரிகோண ஸ்தானம் கேந்திர ஸ்தாணங்களை நன்கு கவனிக்க வேண்டும்.
4. கிரகம் ஆட்சி உச்சம் ஆகியவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
5. சனி செவ்வாய் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
6 ராகு பலம் எப்படி சனி, சுக்ரன் சேர்க்கை எப்படி என பார்க்க வேண்டும்.
7. சந்திரன், குரு எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
8.சூரியன் புதன் பலமாக சேர்க்கைப் பெற்று சனி பார்வை பெற்றால் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆகலாம்.
9. சுக்கிரன் ராகு சேர்க்கை பெற்றாலும் ராகு பலமாக அமையப் பெற்றாலும் எலக்ட்ரானிக் எஞ்னியர் ஆகலாம்.
10. புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்றால் கெமிக்கல், எலக்ட்ரிக்கல் துறைகளில் பணியாற்றலாம்.
11. செவ்வாய் புதன் சனி சேர்க்கை பெற்றால் தொழில் நுட்ப துறைகளில் பணியாற்றலாம்.
12. சந்திரன் புதன் சேர்க்கை பெற்றால் டெக்ஸ்டைல் துறையில் பணியாற்றலாம்
13.சந்திரன் செவ்வாய் புதன் சேர்க்கை பெற்றால் கப்பல் துறையில் பணியாற்றலாம்.
14.சந்திரன், சனி, புதன் அல்லது செவ்வாய் சேர்க்கை பெற்றால நிலக்கரி துறையில் பணியாற்றலாம்.
15 செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை கட்டிடத் துறையில் பணியாற்றலாம்.சுக்கிரன் பலமாக இருந்தால் கட்டிட வரைபட நிபுணர் ஆகலாம்
16. சூரியன் செவ்வாய் சனி அல்லது சுக்கிரன் சேர்க்கை பெற்றாலோ, செவ்வாய் புதன் சேர்க்கை, புதன் சனி சேர்க்கை, சனி சுக்கிரன் சேர்க்கை உண்டானால், வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தொடர்புத் துறை போன்றவற்றில் பொறியாளர் ஆகலாம்.

3. அகால மரணம் யாருக்கு?

ஆயுளை தீர்மானிக்கும் சனி எங்கிருக்கிறது என்று காண வேண்டும். ஆயுள் ஸ்தானம் 8ம் இடம் எப்படி வலிமை பெற்று இருக்கிறது என்று காண வேண்டும். இவைகள் பலம் குறைந்து அத்துடன் ராகு, கேது இருந்தால் திடீரென மரணத்தை உண்டுபண்ணும். ஓரளவு பலம் இருந்தால் மத்திம வயது. நன்கு பலமாக இருந்தால் தீர்க்க ஆயுள்.

4. டாக்டர் தொழிலில் கொடிகட்டி பறப்பது யார்?

டாக்டர் தொழிலில் கொடிகட்டி பறக்க ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?

1. புதன் பலம் பெற்று இருக்க வேண்டும்
அப்படி இருந்தால்தான் நினைவாற்றல் அதிகம் இருக்கும். படித்தவைகளை நினைவில் வைத்துக்கொள்வது டாக்டர் தொழிலுக்கு அவசியமாகும். புதன்  நல்ல இடத்தில் அமைந்திருப்பவர்களுக்கு மதியூகம்,விவேகம் வெகு சிறப்பாய் இருக்கும்.

2. அறுவை சிகிச்சை என்றால் துணிச்சல் இருக்க வேண்டும் இதற்கு செவ்வாய் பலமாக இருப்பது அவசியமாகும்.

3.டாக்டர் தொழிலுக்கு பொறுமை அவசியமாகும். அப்பொழுதுதான் நோயாளிகள் சொல்வதை கவனமாக கேட்க தோன்றும். அப்படியானால் புதன் வலுவாகவும் அதேசமயத்தில் லக்னோத்தோடும் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் டாக்டர் தொழிலில் வெற்றி பெற முடியும்.

4. 10மிடம்தான் மதிப்பு மரியாதை தரும் இடம். இந்த இடத்தின் அதிபதி நன்கு வலுவாக இருந்தால் நல்ல பெயர் கிடைக்கும். இந்த இடம்கெட்டுப்போய் இருக்கக்கூடாது.

5. 3மிடம் நன்கு பலம் பெற்று இருந்தால்தான் எடுத்த காரியத்தில் சிறந்து விளங்க முடியும்.

6. 9மிடம் சிறப்பாக இருந்தால்தான் பாக்கியம் சிறக்கும்.

7. புதனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் நுண்ணறிவாற்றல் வெகு சிறப்பாக இருக்கும்.

8. 2மிடம் வாக்கு ஸ்தானம். இது நன்றாக இருந்தால்தான் சொன்னபடி நிறைவேற்ற முடியும்.

9. மருத்துவ கிரகம் கேது  எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்

10. பல் டாக்கடர் குறித்து அறிய வேண்டும் என்றால் சூரியனின் இருப்பை வைத்து ஆராய வேண்டும்

11 நரம்பு ஸ்பெஷலிஸ்ட்டா என்பதை அறிய புதனின் இருப்பை ஆராய வேண்டும்.

12. எலும்பு ஸ்பெஷலிஸ்டா என்பதை அறிய சனியின் நிலையை காண வேண்டும்.

இப்படி ஒவ்வொரு துறைக்கும் உரிய கிரகத்தின் அடிப்படையில் அவர்கள் எதில் ஸ்பெஸலிஸ்ட் ஆக வருவார்கள் என்று அறிய முடியும்.

மேற்கண்ட விஷயங்கள் யாருடைய ஜாதகத்தில் வெகு சிறப்பாக உள்ளதோ அவர்கள் டாக்டர் தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்!.

5. பயந்தான் கொள்ளி யார்?
   யார் பயந்தான் கொள்ளி? - ஜோதிட ஆராய்ச்சி
1. செவ்வாய் மறைந்துவிட்டாலோ அல்லது பலம் குறைந்துவிட்டாலோ அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. அவர் பயந்தான்கொள்ளியாகவே இருப்பார்.
2. 3மிடத்தில் பலம் குறைந்த கிரக நிலை இருந்தாலும் லக்னம் பலம் இழந்தாலும் பயந்தாங் கொள்ளிதான்.
3. 6க்குரியவன் 12ல் மறைய 6மிடமும் பலமிழந்து போகுமானால் எதிரியை கண்டு நடுங்கும் தொடை நடுங்கியாகவே இருப்பார்கள்.
4. 4லிலே சுபர் இருக்க  அதிலேயே மேலும் சில சுபர்கள் இருக்க அல்லது பார்வை செய்ய ஈவு இரக்கம் அதிகமிருக்கும். அதனால் தயவுதாட்சனியம் அதிகமிருக்கும் பாம்பைக் கண்டால் கூட அடிக்க மாட்டார்கள் பககுவமாய் எடுத்து காட்டில் விட்டுவிடுவார்கள்.  எதிரியே ஆனாலும் எதிர்த்து தாக்கமாட்டார்கள்.

6.  பாசத்தால் மோசம் போகக்கூடியவர் யார்? - ஜோதிட ஆராய்ச்சி

லக்னாதிபதி சுபராக இருந்து சுபர் சேர்க்கையோ,சுபர் பார்வையோ இருக்க ,4மிட அதிபதி சுபராக இருந்து, சுபர் சேர்க்கை சுபர் பார்வை பெற்றால் அவர்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள். ,மிகவும் இலகிய மனதுக்கு சொந்தக்காரர் அவர். அதாவது ஈவு, இரக்கம் மிகவும் அதகமாக இருக்கும் இந்த மாதிரி நபர்களுக்கு. லக்னத்திற்கு குரு சம்பந்தம் இருக்க பெற்றால் மிகவும் நேர்மையாக இருப்பார்கள். மேலும் இந்த அமைப்பு மீன ராசிக்காரர்களுக்கு அமையப்பெற்றால் எதிரியாகவே இருந்தாலும் அந்த எதிரியையும் மன்னி்த்து நண்பராக்கி கொள்ளும் குணம் நிறையவே இருக்கும்.

இந்தமாதிரி ஜாதகருக்கு 7மிடம் 6,8,12 மிடங்களோடு சம்பந்தம் இருந்தால் மனைவியாலும்,கூட்டாளியாலும் வெகுவாக அவமானப்பட்டும் நிறைய நஷ்டப்பட்டும் இருந்தாலும் கூட அவர்களை வெறுக்காமல் “சரி என்ன செய்வது அவங்களும் ஒரு உயிர். அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கு அந்த மனசு நம்மாள எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் எதுவுமே அவங்க தப்பு இல்ல. அவங்களுக்கு அந்த தீய குணத்தை தந்தது இறைவன் தானே அதனால நாமே இறைவனைதான் வெறுக்கனுமேயொழிய நம்ம மனைவியை வெறுக்கக்கூடாது என்று மனைவியை மன்னித்துவிடுவார். கடவுளே இனியாவது என் மனைவிக்கு நல்ல குணத்தை தா என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்.

இந்தமாதிரி ஜாதகருக்கு 4மிடம் 6,8,12 மிடங்களோடு சம்பந்தம் இருந்தால் அன்னையாலும்,அன்னை ஸ்தானத்தில் இருப்பவராலும் வெகுவாக அவமானப்பட்டும் நிறைய நஷ்டப்பட்டும் இருந்தாலும் கூட அவர்களை வெறுக்காமல் “சரி என்ன செய்வது அவங்களும் ஒரு உயிர். அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கு அந்த மனசு நம்மாளாலே எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் எதுவுமே அவங்க தப்பு இல்ல. அவங்களுக்கு அந்த தீய குணத்தை தந்தது இறைவன் தானே அதனால நாமே இறைவனைதான் வெறுக்கனுமேயொழிய நம்ம அன்னையை வெறுக்கக்கூடாது என்றும்” அன்னையை மன்னித்துவிடுவார். கடவுளே இனியாவது என் அன்னைக்கு நல்ல குணத்தை தா என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்.

இந்தமாதிரி ஜாதகருக்கு 3மிடம் 6,8,12 மிடங்களோடு சம்பந்தம் இருந்தால் இளைய சகோதரத்தால் வெகுவாக அவமானப்பட்டும் நிறைய நஷ்டப்பட்டும் இருந்தாலும் கூட அவர்களை வெறுக்காமல் “சரி என்ன செய்வது அவங்களும் ஒரு உயிர். அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கு அந்த மனசு நம்மாளாலே எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் எதுவுமே அவங்க தப்பு இல்ல. அவங்களுக்கு அந்த தீய குணத்தை தந்தது இறைவன் தானே அதனால நாமே இறைவனைதான் வெறுக்கனுமேயொழிய நம்ம இளைய சகோதரத்தை வெறுக்கக்கூடாது” என்று இளைய சகோதரத்தை மன்னித்துவிடுவார். கடவுளே இனியாவது என் இளைய சகோதரத்துக்கு நல்ல குணத்தை தா என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்.

இதே மாதிரி 11 மிடம் அமைந்தால் மூத்த சகோதரத்துக்கும், 9மிடம் தந்தைக்கும், 5மிடமானால் பிள்ளைகளுக்கும் என எண்ணிக்கொள்ளுங்கள்.

7. எல்லோருக்கும் சமமான யோகமே - ஜோதிட ஆராய்ச்சி

உயர்ந்தோர் தாழ்ந்தோர் உலகினில் இல்லை. அத்தனை பேரும் சமம்தான் - இதுதான் ஜோதிட விதி!

          ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு காரணத்துக்காக பிறந்துள்ளார்கள்.அவர்கள் எதுக்காக பிறந்துள்ளார்களோ அந்த நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய வகையில்தான் சிறப்பு அம்சங்களை பெற்று இருப்பார்கள். எல்லோருக்குமே ஒரு செம்பு நிறைய யோகம்தான் கொடுக்கப்ட்டுள்ளது. அது 12 கிளாசில்  ஒவ்வொன்றிலும் வெவ்வேறு உயரத்தில் அந்தந்த நபருக்கு ஏற்றவாறு ஊற்றப்ட்டுள்ளது. அவ்வளவுதான். எந்த கிளாசில் உயரமாக யோகம் ஊற்றப்ட்டுள்ளதோ அந்த வகையான சிறப்பு அம்சங்கள் அவரிடம் நிரம்ப இருக்கும் எந்த கிளாசில் மிகக் குறைவாக யோகம் ஊற்றப்பட்டுள்ளதோ அந்த அம்சங்கள் அவரிடம் குறைந்து காணப்படும். இந்த 12 கிளாசைதான் நாம் ஜாதக் கட்டம் என்கிறோம். பெரிய பணக்காரன் என்றால் அவரிடம் பணம்தான் பெரிதாக இருக்கும். அதற்குப்பதிலாக வேறு யோகங்களில் பெரிய பாதிப்புதான் இருக்கும். அதனால் இறைவன் படைப்பில் அனைவரும் சமமே. இது சம்பந்தமாக கீழே ஒரு சிறு கதை தந்திருக்கிறேன்.

8. நரபலி மந்திரவாதிகளாக மாறும் நபர் யார்?

            நரபலியிடல் வேண்டும் என்றாலே ஈடுபடுபவர் மனம் கல்நெஞ்சு கொண்டவராக இருக்க வேண்டும். அப்படியானால் சந்திரன்(மனசு) ஜாதகத்தில் கெட்டிருக்க வேண்டும். 4மிடம் பாவக்கிரகங்களால் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். 2மிடம் வாக்கு ஸ்தானமும் பாதிக்கப்ட்டிருக்க வேண்டும். 3மிடம் , 9மிடமும் பாதிக்கப்ட்டிருக்க வேண்டும். இவைகள் பாதிக்கப் பட்டு இருந்தால்தான் அவர்கள் இப்படிப்பட்ட ஈனத்தமான காரியங்களில் ஈடுபட முடியும்.   இரத்தத்துக்குரிய செவ்வாய்(ரத்தம்)  இருப்பது எங்கே, சனி, ராகு(மந்திரம்),புதன்(கல்வி), குரு (சாஸ்திரம்) இருப்பது எங்கே என்பதை கவனிக்க வேண்டும். 6,8,12க்குரியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.    ஜாதகத்தில் 2மிடம் 4மிடம் லக்னம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்தக் காரியங்களில் ஈடுபட்டு ஜெயில் தண்டனை பெறுவார்கள்.

9. காதல் திருமணம் யாருக்கு அமையும்? ஜாதகப்படி கலப்பு திருமணமா ?
ஜாதகப்படி காதல் திருமணமா?  கலப்பு திருமணமா ? ஜோதிடம் -  காதல் திருமணம் நடக்குமா?
காதல் திருமணம்
 “இளமையில் திருமணம், காதல் திருமணம், தடைபடும் திருமணம், திருமணமின்மை, கணவன்/மனைவியின் ராசி/லக்கினம் அறிதல், தாமதமாகும் திருமணம், மதம்/ஜாதி மாறி திருமணம், கணவன்/மனைவியின் பெயர் அறிதல்,ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், காதல் தோல்வி,குடும்பத்தில் குழப்பங்கள், ஜாதகப் பொருத்தம்,தற்காலிகப் பிரிவினை, திருமணப் பொருத்த சூட்சுமம், விவாகரத்து, திருமணம் நடைபெறும் காலம் ” இப்படி திருமணம் பற்றிய ஏராளமான விஷயங்களை அறியவேண்டுமானால் 7மிடத்தை முக்கியமாக கொண்டு அது சார்ந்து மற்ற கட்டங்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய வேண்டும்.


அமலாபால் ஜாதகத்தை பார்க்கவும் (கார்திக் ஜோதிடம் பிளாக்கில் இருக்கும் ஜாதகம் பார்க்கவும்) மனசுக்குரிய சந்திரன் காதலுக்கே உரிய சுக்ரன் வீட்டில் இருப்பதை காணலாம். லக்னத்தில் ராகு இருந்தால் இனம் மாறி திருமணம் செய்ய துணிச்சல் ஏற்படும். லக்னாதிபதி காதலுக்குரியோனாகிய சுக்ரனுடன் சேர்ந்ததோடு அல்லாமல் 5ம் இடத்தையும் பார்வை செய்கிறார். அந்த சுக்ரனின் மற்றொரு வீட்டில்தான் 5க்குரிய செவ்வாயும் அமர்ந்து இருக்கிறார்.7க்குரிய புதன் 11ல் இருந்து 5யை பார்பதோடு 5க்குரியோனுடன் சேர்க்கையும் பெற்று உள்ளது. எனவே தனது சுயபுத்தி உணர்வாலேயே வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அமைந்தது.

10. ஆயள்காரகன் பலம் இருந்தும் மரணம் நேரக் காரணம் என்ன?

பிற‌ப்பு முத‌ல் இற‌ப்பு வரை எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான். அதுபோலத்தான் அகால மரணமும். காக்கையர் நாடி போன்ற பழைய நூல்களில் வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறப்பான், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வான், விஷத்தால் இறப்பான், தீயால் இறப்பான் என்பது போன்ற கொடூர மரணங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. சிரசு எடுக்கப்பட்டு மரணமடைவான் என்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. இந்த லக்னத்தில், இந்த ராசியில், இந்த திதியில் பிறந்தவன் இந்த லக்னத்தில், இந்த திதியில் மாலைப் பொழுதில் இந்த நொடிப் பொழுதில் இறப்பான் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஜாதகத்தில் எடுத்துக் கொண்டால் ஆயுள் பாவம் என்று ஒன்று உள்ளது. 8வது இடம்தான் ஆயுள் பாவம். அதாவது ஜென்ம லக்னத்தில் இருந்து 8வது இடம் ஆயுள் பாவம். பொதுவாக ஆயுளுக்குரிய கிரகமாக சனி அதாவது ஆயுள் காரகன். ஆயுள் ஸ்தானத்திற்குரிய கிரகமோ அல்லது சனியோ வலுவாக இருந்தால் தீர்க்காயுசு யோகம் என்கிறோம்.8வது வீட்டிற்குரியவனும் கெட்டு, சனியும் கெட்டிருந்தால் குறையாயுள் யோகம். துர்மரணம் ஏற்படும். இனி ஆர்த்தி அகர்வால் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்வோம்.
(கார்திக் ஜோதிடம் இணைய தளத்தில் அகர்வால் ஜாதகம் காண்க)
ஆயுள் பலத்துக்குரிய சிறம்பம்சங்கள்
1.) 8க்குரியோனே ஆயுள்காரகன் சனியாக அமைந்திருப்பது
2.) அந்த 8க்குரியோன் உச்சம் பெற்றது மேலும் சிறப்பே

ஆயுள் பலத்துக்கு பாதகமான அம்சங்கள்
1.)  உச்சனை உச்சன் பார்த்தால் நீச யோகம் ஏற்படும்.  இங்கு உச்சம்பெற்ற  8க்கான சனியை உச்சம் பெற்ற சூரியன் பார்வை செய்கிறது. இது ஆயுள்பலத்தை குறைக்கிறதென்றால் அந்த சூரியனுடன் சேர்ந்திருக்கும் செவ்வாயே அந்த வீட்டின் அதிபதியாகவும் இருப்பதால் இன்னும் சூரியன் மிகவும் வீரிய பலம் பெருகிறான். அத்தகைய வீரிய பலத்தினால் மேலும் சனியின் பலம் குறைந்து போகிறது.  ஆக 8மிடம் வெகுவாக பலம் குறைந்து விட்டது.

 லக்ன பலம்  லக்னாதிபதி விரயத்தில் இருக்கிறது ஆக லக்னபலம் குறைந்துவிட்டது் அப்புறம் விரயாதிபதியே லக்னத்தில் இருக்கிறது இது இன்னும் அதிகப்படியாகவே லக்னபலத்தை குறைக்கும். இதனால் மேலும் லக்ன பலம் குறைந்து மிகவும் வீக்காக போய்விட்டது.

பூர்வ ஜென்ம புண்ணிய பலம்   அந்த பூர்வஜென்ம புண்ணிய ஸ்தானத்தில்தான் உச்சனை உச்சன் பார்த்து நீச யோகம் ஏற்பட்டு இருந்து பலத்தை குறைத்து இருக்கிறது. போதாக்குறைக்கு அந்த வீட்டின் அதிபதி சுக்கரன் இருக்கும் வீட்டின் அதிபதியும் விரய ஸ்தானத்தில்தான் இருக்கிறது. அதனால் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமும் பலம் குறைந்தே உள்ளது. 8ல் இருக்கும் சந்திரனே ஆயுளுக்கு கொஞசம் பலனை தருகிறது.

நோய் ஸ்தானம் அறிதல்: 6மிடத்திலே குரு இருக்கின்றது. இவரே இதயத் தசைகளுக்கும் மாரடைப்புக்கும் காரணகர்த்தா. இவரே நோய் ஸ்தானத்தில் இருந்து நோயை உருவாக்குகிறார். இதனால் இந்த ஜாதகர் பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளையும் கொழுப்பு சத்து மிகுந்த உணவுப்பொருட்களையும் உண்ண நேரிடும்.  இதன்காரணமாகவே உடல் பெருக்கின்றது. அந்த வீட்டின் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று உள்ளதுடன் உச்சம்பறெ்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றும் உள்ளது அதனால் அவர் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களையும் காரம் சார்ந்த உணவுப் பொருட்களையும் உண்டிருப்பார். இதனால் அது மேலும் நோயை அதிகரிக்கும் நிலையையே ரத்தஅணுக்களில் உருவாக்கும். இது இந்தவகையான ஜாகத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. அப்புறம் அந்த குருவை புதன் பார்க்கிறார். அந்த புதன் சுவாசத்துக்கு காரணமான நுரையீரலையும் உடலிலுள்ள தோல் மற்றும் நரம்புகளையும் குறிக்கும். மூச்சு திணறல் என்பது நுரையீரல் சார்ந்த நோய் ஆகும். ஆக அவரும் நோய் ஸ்தானத்தை பார்பதால் புதனுக்குரிய நோய்களையும் உருவாக்குவார். அவரே லக்னத்துக்கு அதிபதியும் கூ்ட எனவே ஜாதகரே அந்த நோய் தீவிரமாகவும் காரணமாகிடுவார் என்றாகிறது.  அந்த லக்னத்திலேயே புத்திசாலிதனத்துக்குரிய சுக்ரன் அமைய சுக்ரனும் புதனும் பரிவர்த்தனை செய்கிறது. ஆக புத்திசாலிதனமும் நோய் அதிகமாகும் காரியங்களிலே ஈடுபடும் என்று தெரிகிறது.

மேற்கண்டவைகள் அனைத்தும் கார்திக் நுண்ணாய்வு ஜோதிடம் என்ற பிளாக்கிலிருந்து  தொகுக்கப்பட்டவை

1. குதிகால் வலி ஜாதகப்படி யாருக்கு வரும்
2. பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்?
3. அகால மரணம் யாருக்கு?
4. டாக்டர் தொழிலில் கொடிகட்டி பறப்பது யார்?
5. பயந்தான் கொள்ளி யார்?
6. பாசததால் மோசம் போவது யார்?
7. எல்லோருக்கும் சமமான யோகமே- எப்படி?
8. நரபலி மந்திரவாதிகளாக மாறும் நபர் யார்?
9. காதல் திருமணம் யாருக்கு அமையும்? ஜாதகப்படி  கலப்பு திருமணமா ?
10.ஆயள்காரகன் பலம் இருந்தும் மரணம் நேரக் காரணம் என்ன?